Breaking News
Home / latest-update / புத்துாரில் விசிறியால் வெட்டுப்பட்டு பெண் பலி!! வெங்காயத்தால் வந்த வினை!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

புத்துாரில் விசிறியால் வெட்டுப்பட்டு பெண் பலி!! வெங்காயத்தால் வந்த வினை!!

உழவு இயந்திரத்தில் பொருத்திய காற்றாடியில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

அறிவொறி வீதி புத்தூர் பகுதியினை சேர்ந்த இரத்தினம் தவமலர் வயது(58) என்ற பெண்மணியே  இவ்வாறு உயிரிழந்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக விடாது பெய்த மழையினால் வீட்டில் கட்டியிருந்த வெங்காய பிடிகள் மழையில் நணைந்திருந்தன. அவற்றினை உலர்த்துவதற்காக வீடடில் நின்றவர்கள் உழவு இயந்திரத்தினை இயக்கி அதனூடாக காற்றடியினை இணைத்து வெங்காயத்தினை உலரவைத்துள்ளனர்.

இதன் போது குறித்த பெண்மணி ஆடைகளை உலர்துவதற்காக காற்றாடிக்கு அருகில் ஈரமான ஆடைகளை  எடுத்து சென்றுள்ளார். காற்றாடியில் இருந்த வந்த காற்று உயிரிழந்த பெண்மணியினை உள் இழுத்துள்ளதுடன், அணிந்திருந்த சாறியும் சக்கரத்தில் சிக்குண்டுள்ளது. காற்றாடியின்  பிளேட்டுக்குள் சிக்குண்டதில் பாரிய வெட்டுக்காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவா் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது இடைநடுவில்  உயிரிழந்துள்ளார்.

சடலம் பொலிஸ் விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Check Also

சீனாவில் கார் விபத்தின்போது வரிசையாக 28 லாரிகள் மோதல் – 3 பேர் பலி

சீனாவின் ஹேனான் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த கார் விபத்தின் எதிரொலியாக 28 லாரிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் …