Breaking News
Home / latest-update / புகையிரத்தில் மோதி ஒருவர் பலி (படங்கள்)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

புகையிரத்தில் மோதி ஒருவர் பலி (படங்கள்)

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (05) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற கடவையை மோட்டார் சைக்கிளில் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




36 வயதுடைய 3 பிள்ளைகளின் தகப்பனான கிளிநொச்சி கண்ணகியம்மன் கோவிலடி மளையாலபுரத்தை சேர்ந்த மாரிமுத்து நாகராசா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதிலேயே குறித்த நபர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …