Breaking News
Home / latest-update / பீட்சா வாங்கி கொடுத்து மகளை கொடூரமாக கொன்ற தந்தை!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பீட்சா வாங்கி கொடுத்து மகளை கொடூரமாக கொன்ற தந்தை!

பிரித்தானியாவின் Brownhills பகுதியைச் சேர்ந்தவர் 54 வயது Bill Billingham. தனது பிள்ளைகளின் புகைப்படங்களை Facebookஇல் அவ்வப்போது வெளியிடுவது அவரது வழக்கம்.

இந்நிலையில் தனது 8 வயது மகள் பீட்சா சாப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். சரியாக புகைப்படம் போட்டு ஒரு மணி நேரம் கழித்து, தற்போது அவரை விட்டுப் பிரிந்து வாழும் அவரது மனைவி, சாலையில் நின்று தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூச்சலிட்டுள்ளார்.

அவ்விடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் Mylee Billingham என்னும் அந்த எட்டு வயதுச் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் உயிரிழந்துள்ளார்.

கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தையின் உடலிலும் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் Bill Billingham வேலையிழந்ததாகக் கூறப்படுகிறது.

பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Bill Billinghamஇன் சகோதரரான Mark Billingham, Brad Pitt, Angelina Jolie மற்றும்Tom Cruise ஆகியோரின் தனிப்பட்ட பாதுகாவலராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் – விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் என்று கூறியிருக்கிறார். #Petta #Rajini #VijaySethupathi …