Breaking News
Home / latest-update / பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரம்: ஓட்டல் அதிபர், மனைவியின் விரல்கள் துண்டிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஆத்திரம்: ஓட்டல் அதிபர், மனைவியின் விரல்கள் துண்டிப்பு

திருநெல்வேலி : பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என்ற ஆத்திரத்தில் ஓட்டல் அதிபரின் நான்கு விரல்களையும் காலையும் வெட்டியதோடு, அவரது மனைவியின் கை விரலையும் ரவுடிகள் வெட்டினர். ரவுடிகளை கண்டித்து கடையடைப்பு நடந்தது.

திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில், பேட்டையை அடுத்துள்ள சுத்தமல்லி. அங்கு ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஒரு ஓட்டலில் நேற்று மாலையில் ஏழுபேர் கும்பல், பிரியாணி வாங்கிச் சென்றனர்.
கோபால சமுத்திரத்தில் தாமிரபரணியில் குளித்துவிட்டு, மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அதில் சிக்கன் லெக் பீஸ் இல்லை என ஆத்திரமுற்றனர்.
அங்கிருந்த கிளம்பிய கும்பல், சுத்தமல்லி ஓட்டலுக்கு வந்தனர். அங்கு ஜாகீர் உசேனின் மனைவி பானு இருந்தார். அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது தலையிலும் கையிலும் அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடது கை விரல் துண்டிக்கப்பட்டது. கடைக்குள் இருந்த ஜாகீர் உசேன் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வலது கையின் நான்கு விரல்களை துண்டித்தனர். ‛லெக் பீஸ் வைக்கமாட்டாயா’ என கேட்டு அவரது காலிலும் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
காயமுற்ற இருவரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய ரவுடிக்கும்பல் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. 7 பேர் கும்பல் மீதும் பல்வேறு வழிப்பறி, கொள்ளை, அம்பையில் போலீஸ் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இருப்பினும் யாரையும் கைது செய்ய சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடையடைப்பு : குற்றவாளிகள், ரவுடிகளின் அட்டகாசம் சுத்தமல்லியில் தினம் தினம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சுத்தமல்லியில் வியாபாரிகள் நுாற்றுக்கணக்கான கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனிடையே மாலையில் சுத்தமல்லி சபரி 27, பேட்டை சுடலைமுத்து ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

Check Also

தென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

தென்மராட்சிப் பகுதியில் பாம்பு மற்றும் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையில் மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டுள்ளனர். …