Breaking News
Home / latest-update / பிரசவ வலியை தாங்க முடியாது பெண் தற்கொலை! அதிர்ச்சியில் வைத்தியசாலை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பிரசவ வலியை தாங்க முடியாது பெண் தற்கொலை! அதிர்ச்சியில் வைத்தியசாலை

பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல், ஜன்னல் வழியே குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவத்திற்காக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குழந்தையின் தலை பெரிதாக இருந்த காரணத்தால், சுகப் பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய, அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டது.

ஆனால், அந்த பெண்ணின் கணவர் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் வேறு வழியின்றி சுகப்பிரசவத்திற்காக அப்பெண் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் பிரசவ வலியை தாங்க முடியாத பெண், ஜன்னல் வழியே வெளியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் அவருடைய பெண் குழந்தையும் உயிரிழந்துவிட்டது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …