Wednesday , February 21 2018
Breaking News
Home / latest-update / பிக் பாஷ் டி20 லீக்: வெயின் பிராவோ 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல்
https://www.facebook.com/esoftjaffna/

பிக் பாஷ் டி20 லீக்: வெயின் பிராவோ 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல்

பிக் பாஷ் டி20 லீக்: வெயின் பிராவோ 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘பிக் பாஷ்’ டி20 லீக் தொடரின்போது காயத்திற்குள்ளானார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சுமார் ஆறேழு மாதங்கள் ஓய்வில் இருந்த பிராவோ, தற்போது கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார்.

காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் கூட விளையாடவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்திற்கு எதிராக விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்கும் என வெயின் பிராவோ நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.

இதனால் இந்த வருடத்திற்கான பிக்பாஷ் லீக்கில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இன்று நடைபெற்ற லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் – மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இதில் வெயின் பிராவோ மெல்போர்ன் அணிக்காக விளையாடி வருகிறார்.

டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. வெயின் பிராவோ சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

காயத்தில் இருந்து மீண்டுள்ள வெயின் பிராவோ இந்த சீசனின் முதல் போட்டியிலேயே 5 விககெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அவர் நான்கு ஓவரில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.