Thursday , February 22 2018
Breaking News
Home / latest-update / பாலியல் தொழில் விடுதி முற்றுகை: 7 பெண்கள் கைது
https://www.facebook.com/esoftjaffna/

பாலியல் தொழில் விடுதி முற்றுகை: 7 பெண்கள் கைது

கொஹூவலை – பெப்பிலியான பிரதேசத்தில் இரண்டு மாடி ஆடம்பர வீடொன்றில் இளம் பெண்களை பயன்படுத்தி, ஆயுர்வேத உடல்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் நடாத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார் பெண் ஆயுர்வேத மருத்துவர் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.

பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முற்றுகையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வாடிக்கையாளரை போல் பாலியல் தொழில் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவர் அங்கு பிரவேசிக்க 1500 ரூபாவை செலுத்தியுள்ளார்.

இதன் பின்னர் பொலிஸார் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் கொழும்பை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.