Breaking News
Home / latest-update / பண்டாரவளை பகுதியில் நிலவெடிப்பு! பொது மக்கள் அவசரமாக வெளியேற்றம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

பண்டாரவளை பகுதியில் நிலவெடிப்பு! பொது மக்கள் அவசரமாக வெளியேற்றம்

பண்டாரவளை பகுதியில் நேற்று பெய்த அடைமழை காரணமாக வீடுகள் மற்றும் நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள் கேந்திர நிலையம் அறிவித்துள்ளது.

திக்அராவ, கிணிகம, வலஸ்பெத்த, அப்புஹாமி வீதியில் உள்ள பகுதிகளில் இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவ்வாறான 48 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட வீடுகளில் வெயில் தாக்கம் ஏற்பட்ட பின்னர் அவற்றின் பிளவுகள் அதிகரித்துள்ளன. தரையோடுகள் மற்றும் சீமெந்து பூச்சுக்களில் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்த பகுதியிலிருந்து 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த பகுதியில் மேலும் சில குடும்பங்கள் வெடிப்புகள் ஏற்பட்டுள்ள வீடுகளிலேயே வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …