Breaking News
Home / விளையாட்டு / IPL T20 - 2018 / பஞ்சாப்-க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு- முரளி விஜய், கெய்லுக்கு இடம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பஞ்சாப்-க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு- முரளி விஜய், கெய்லுக்கு இடம்

ஐபிஎல் தொடரின் 12-வது ஆட்டம் சண்டிகரில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் டாஸ் சுண்ட, டோனி ‘ஹெட்’ என அழைத்தார். டோனி அழைத்தபடியோ ‘ஹெட்’ விழ டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவிற்குப் பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. முரளி விஜய், 4, டோனி, 5. சாம் பில்லிங்ஸ், 6. ஜடேஜா, 7. வெயின் பிராவோ, 8. தீபக் சாஹர், 9. ஹர்பஜன் சிங், 10. இம்ரான் தாஹிர், 11. சர்துல் தாகூர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அக்சார் பட்டேல் நீக்கப்பட்டு பரிந்தர் சரண் சேர்க்கப்பட்டுள்ளார். இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கேஎல் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3. மயாங்க் அகர்வால், 4. ஆரோன் பிஞ்ச், 5. யுவராஜ் சிங், 6. கருண் நாயர், 7. அஸ்வின், 8. அந்த்ரே டை, 9. பரிந்தர் சரண், 10. மோகித் சர்மா, 11. முஜீப் உர் ரஹ்மான்.

Check Also

கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் விண்டோஸ் இயங்கக்கூடிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #GooglePlayStore #Apps கூகுள் பிளே ஸ்டோர் …