Breaking News
Home / latest-update / நீ போதும் | கவிதை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நீ போதும் | கவிதை

கவிப்பாடும் மன்னனுக்கு,
கவிச்சொல்லும் காதல் சொல்லவா?
நிழலான உந்தன் கவியை,
நிஜமாக நானும் தீட்டவா?
அலையாக நானும் கரையேற வேண்டும்…
அலையாக நீயும், நானும் கரையேற வேண்டும்….

பனிப்பொழிவு வருகிறபோது
நெருப்புக்கும் குளிருமா?
தோட்டத்து பூக்கள்கூட
அனலில்தான் மலருமா?
கண்ணா நான் இளங்கன்னி,
தேய்கிறேனே உன்னை எண்ணி,
எனை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிடு.
எனக்கே எனக்கென்று உனை அள்ளிக் கொடு.

கண்ணா உன் துறுதுறுக் கண்கள் என்னைதான் ரசிக்கிறதா?
நான் பார்க்கும் போது மட்டும் பொய்யாக நடிக்கிறதா?
உயிரே நீ மறைத்தாலும் ,
உணர்வாலே நான் அறிவேன்…
அன்பே நான் உன்னாலே வாழ்ந்திருப்பேன் மண்மேலே…
பூவாக நான் வாடுவது தெரியலையா?
வரம் சேர்க்க என் தோளில் மலர்மாலையாய் நீ போதும்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …