Breaking News
Home / latest-update / நீரில் மிதந்த சடலத்தால் பதற்றமடைந்த தமிழ் மக்கள்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நீரில் மிதந்த சடலத்தால் பதற்றமடைந்த தமிழ் மக்கள்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவில் இன்று மதியம் 2.00 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் வெஞ்சர் லோவர் லோறன்ஸ் பகுதியில், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக பொது மக்கள் வழங்கிய தகவலினையடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்ட இந்தச் சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ லெட்சுமி மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சின்னயப்பன் நிரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த நான்கு தினங்களுக்கு முன் காணாமல் போய் உள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகியது.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …