Breaking News
Home / latest-update / நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்! யாழ். சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்! யாழ். சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.

யாழ். நீதிமன்ற வளாகத்தில் யாழ்ப்பாண சட்டதரணிகள் சங்கத்தினரிடையே இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிபதிக்கும் அவரது உறவினர்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்திற்கு இலக்காகி உயிரிழந்த நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலருக்கும் இரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …