Breaking News
Home / latest-update / நீங்க ரிஜக்ட் ஆவதற்கு இதும் காரணமாக இருக்கலாம், பெண்கள் கூறும் 10 விஷயங்கள்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நீங்க ரிஜக்ட் ஆவதற்கு இதும் காரணமாக இருக்கலாம், பெண்கள் கூறும் 10 விஷயங்கள்!

மனிதரிடம் ஒரு பொதுவான குணாதிசயம் இருக்கிறது, ஒரு நபர் தமக்கு சார்ந்து பேசி, கருத்து தெரிவிக்கும் வரை அவர் மீது கொள்ளை பிரியம் இருக்கும். அதே நபர், வேறு தருணத்தில், வேறு சூழலில் உங்களின் வேறு கருத்துக்கு எதிர் கருத்து, அல்லது மாற்று கருத்து கூறினால் அவர் மீது கோபம் வந்துவிடும். அதுவரை நல்லவராக புகழ்ந்து தள்ளியே அதே நபரை, அதன் பிறகு இகழ்ந்து பேசுவார்கள். இதை நாம் காதலின் முதல் நிலையான ப்ரபோசல் ஸ்டேஜில் அதிகம் காண முடியும். அந்த பொண்ணு அப்படிடா, இப்படிடா, தேவதை டா என ரசித்த காதலன், ப்ரபோசல் நிராகரிப்பு ஆனபிறகு, அவ மோசம் டா, கேரக்டர் சரியில்ல, நல்லவேளை இப்போவாவது தெரிந்தது என சமாளிப்பார்கள். ஒரு பெண், ஒரு ஆணை நிராகரிப்பு செய்ய காரணங்கள் என்னென்ன? வாங்க என்ன சொல்றாங்கன்னு பார்களாம்…

அடிடா அவள… எப்போதும் பெண்களை குற்றம் குறை கூறிக் கொண்டு, திட்டிக் கொண்டு, மட்டம்தட்டி கவிதை, பாடல் பாடிக் கொண்டு திரியும் ஆண்களை தான் பெண்கள் முதலில் நிராகரிப்பு செய்கிறார்கள். வெட்டு, குத்து! கெத்து என்ற பெயரில் வெட்டுவேன், குத்துவேன் என்று சுத்தும் ஆண்களை கண்டால் அச்சம் தான் வரும் அன்பு எல்லா வராது. ரவுடி போன்ற குணம் கொண்ட ஆணை காதலிப்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம், நிஜ வாழ்வில் நடக்காது.

ஃபேக்கு! பழகும் வரை நல்லவன் போல இருப்பார்கள், அவர்கள் காதலை கூறி, இல்லை பிடிக்கவில்லை என்றால், உடனே எதிரி போல நடந்துக் கொள்வார்கள். அதுவரை நம்மை பற்றி புகழ்ந்து பேசிய வாய், திட்டி, இகழ்ந்து, குணங்களை பற்றி கீழ்த்தரமாய் பேசும். இவர்களை நிராகரிப்பு செய்யாமல், வேறு என்ன செய்ய?

கண்ணாயிரம்! முகத்தில் மட்டும் தான் இரண்டு கண்கள் இருக்கும். ஆனால், அந்த இரண்டு கண்கள் ஆயிரம் இடங்களை, பெண்களை பார்த்துக் கொண்டிருக்கும். நாம் அருகே இருக்கும் போதே மற்ற பெண்களை ரூட்டு விட்டு, சைட் அடிக்கும் ஆண்களின் காதல் பெரும்பாலும் நிராகரிப்பு பெட்டியில் தான் விழும்.

டர்ட்டி டாக்! சில ஆண்கள் பெண்களிடம் சில்மிஷமாக பேசினால் மடிந்துவிடுவார்கள் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வேறு பெண்கள் இருக்கிறார்கள், அது காதலில் விழாது, இச்சையில் தான் விழும். காதலிக்கும் பெண்ணிடமே அசிங்கமாக பேசி, நடந்துக் கொள்ளும் ஆண்கள் உடனடியாக நிராகரிப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.

நாற்றம்! ஆண்கள் உடையில் செலுத்தும் அளவு கவனத்தை உடல் நாற்றத்தின் மீதும் செலுத்த வேண்டும். வாசனை திரவியம் அடிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் உடல் துர்நாற்றம் அடிக்காதபடி இருக்க வேண்டும். பக்கத்துலேயே நிற்க முடியாத அளவு நாற்றம் அடித்தால் நிராகரிப்பு தவிர வேறு என்ன வழி இருக்கிறது. அம்மா பிள்ளை! அம்மாவின் பேச்சை கேட்க வேண்டாம் என நாங்கள் கூறவில்லை, அதற்காக கடைசி வரை அம்மா பிள்ளையாகவே தான் இருப்பேன் என்றால், அப்பறம் எதுக்கு நாங்கள்… ஸ்ட்ரெய்ட்டா நிராகரிப்பு தான்…

நாட்டாமை! காதல் உறவில் இணையும் முன்னரே, நீ இதை செய், அதை செய்யாதே, இந்த உடை எல்லாம் ஏன் உடுத்துகிறாய் என நிற்பதில் இருந்து, உட்காரும் வரை, எழுந்ததில் இருந்து உறங்கும் வரை கட்டளையிட்டுக் கொண்டே இருக்கும் ஆண்களை நிராகரிப்பு செய்வது தான் சரி. மயில்வாகனம்! ஆண்களின் அழகில் சிறந்தது வாகனம் ஒட்டுதல். அதையும் ஸ்டைலாக ஒட்டுதல். சரி, ஸ்டைலாக இல்லை என்றாலும், வாகனம் ஓட்டவாவது தெரிய வேண்டும் அல்லவா? காதலில் திரில் இருப்பதே லாங் பைக் டிரைவ் தான். வண்டி ஓட்ட தெரியவில்லை என்றால் அரசாங்கமே லைசன்ஸ் தராது, பிறகு எப்படி நாங்க மட்டும் லைசன்ஸ் தருவது?

பெருமை! எனக்கு இத்தனை பெண் தோழிகள் இருக்கிறார்கள், இதோ இவள் எனக்கு என்ன செய்தி அனுப்பியிருக்கிறாள் பாரு… என பெருமை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆண்கள் அந்த பெண்களையே காதலித்துக் கொள்ளட்டும் என நிராகரிப்பு செய்துவிடுவோம்.

Check Also

சீனாவில் கார் விபத்தின்போது வரிசையாக 28 லாரிகள் மோதல் – 3 பேர் பலி

சீனாவின் ஹேனான் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த கார் விபத்தின் எதிரொலியாக 28 லாரிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் …