Wednesday , March 21 2018
Breaking News
Home / latest-update / தொடர்ந்து விக்கல் வந்தால் நிறுத்துவது எப்படி?
https://goo.gl/forms/Iiu2lq56Uiy34mYh2

தொடர்ந்து விக்கல் வந்தால் நிறுத்துவது எப்படி?

விக்கல் வராமல் தடுக்க, பெரிதாக எதுவும் தேவையில்லை, வழக்கமாக நமது உடல் நலனுக்கு என்ன செய்வோமோ, அதையே தொடர்ந்து செய்து வந்தால் போதும்.

தொடர்ந்து விக்கல் வந்தால் நிறுத்துவது எப்படி?

விக்கல் எடுக்கும் சமயத்தில், நாம் எப்படியாவது விக்கலை நிறுத்த வேண்டும் என பிரயத்தனம் செய்வதும், அதனால் அடையும் மன உளைச்சல்களும் மிக அதிகம்தான், சில நிமிடங்களே நீடிக்கும் விக்கல், நீங்குவதற்குள் நம்மை ஒரு பாடுபடுத்திவிடும் என்பதில், ஐயமில்லை.

எல்லாம், அவசரம்தான் காரணம். காலையில் அலுவலகத்துக்கோ அல்லது பள்ளி கல்லூரிகளுக்கோ செல்லத் தாமதாமாகிவிடும் என எண்ணி, அல்லது மதிய உணவு நேரத்தில் சாப்பிடும்போது, வரும் போன் அழைப்பை பேசிக்கொண்டே சாப்பிடுவது, அரட்டையடித்துக்கொண்டே சாப்பிடுவது, ஏதோ சிந்தனையிலேயே சாப்பிடுவது போன்ற சாப்பிடும்போது செய்யத்தகாத அத்தகைய செயல்கள் மூலம் விக்கல் வரலாம்.

காலை சிற்றுண்டியை நாம் அவசர அவசரமாக அள்ளி விழுங்கும்போதோ, அவரசமாக ஏதேனும் சூடான பானங்கள் பருகும்போதோ நமக்கு விக்கல் ஏற்படுகிறது. மேலும், நம்முடைய மூச்சுக்காற்று, மூச்சுக்குழாய்கள் வழியே உடலில் பரவும்போது, உடலில் வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே உள்ள தசைகள் திடீரென தானாக சுருங்கி விரியும் தன்மையை அடையும்போது, அதன் காரணமாக விக்கல் ஏற்படுகிறது.

விக்கல் சாதாரணமாக, சில நிமிடங்களில் நின்றுவிடும், அல்லது நாம் விக்கலை நிறுத்த எடுக்கும் முயற்சிகளின் விளைவால், விக்கல் நின்றுவிடும். நீண்ட நேரம் தொடரும் விக்கலால், களைப்பு மற்றும் உணவில் நாட்டமின்மை போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்,

துளசி இலைகள் சிறிதளவு எடுத்து வாயில் மென்று வர, விக்கல் தீர்ந்துவிடும். துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால், துளசி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

விக்கல் எடுக்கும் சமயத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, சற்று நேரம் மூச்சுக் காற்றை உள்ளேயே வைத்திருந்து பின்னர், மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம், விக்கலைப் போக்கலாம்.

பொதுவாக கிராமங்களில் செய்வார்கள், விக்கல் வரும்போது, ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக்கொள்ள, விக்கல் நீங்கிவிடும். தயிரில் சற்றே கூடுதலாக உப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பருகிவர, விக்கல் தீரும்.

விக்கல் வராமல் தடுப்பது எப்படி?

விக்கல் வராமல் தடுக்க, பெரிதாக எதுவும் தேவையில்லை, வழக்கமாக நமது உடல் நலனுக்கு என்ன செய்வோமோ, அதையே தொடர்ந்து செய்து வந்தால் போதும். உதாரணமாக, சூடான அல்லது குளிரான நீராக அல்லாமல், சாதாரண தண்ணீரை தினமும் அடிக்கடி நிறைய பருக வேண்டும், குறைந்த பட்சம் எட்டு லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு நாம் பருக வேண்டும்.

அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, உணவு உண்ணும்போது, மெதுவாக, உணவை நன்கு மென்று உண்ண வேண்டும், அளவுக்கு மீறி உண்ணாமல் அளவுடன் சாப்பிட வேண்டும், அவசரம் கூடாது. நன்கு செரிக்கக்கூடிய உணவுகளை மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். சூடான உணவு வகைகளை தவிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும், ஊட்டமுள்ள புரதச்சத்துகள் அதிகமுள்ள உணவு வகைகள் சாப்பிடவேண்டும்.

Check Also

03 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. …

Leave a Reply

Your email address will not be published.