Breaking News
Home / latest-update / தைவானில் நேற்று 6.1, 5.5 மற்றும் 5.2 ரிக்டர் அலகுகளில் நிலநடுக்கம்…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

தைவானில் நேற்று 6.1, 5.5 மற்றும் 5.2 ரிக்டர் அலகுகளில் நிலநடுக்கம்…!

தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் 6.1 ரிக்டர் அலகுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் கடற்கரை நகரான ஹீவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் கடலுக்கு அடியில் எட்டு கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. ஆனால் குறைந்த அளவிலான பாதிப்புக்களே ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இதே பகுதியில் 5.2 லிருந்து 5.5 ரிக்டர் அலகுகள் வரையிலான நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …