Breaking News
Home / latest-update / தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – பொதுநல மனுவின் மீது சுப்ரீம் கோர்ட் 28-ம் தேதி விசாரணை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – பொதுநல மனுவின் மீது சுப்ரீம் கோர்ட் 28-ம் தேதி விசாரணை

புதுடெல்லி:

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு காவல் துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி வழக்கறிஞர் ஜி.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என மனுதாரர் கேட்டுக் கொண்டார்.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் மறுவிசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Thoothukudipolicefiring

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …