Saturday , February 24 2018
Home / latest-update / துரோகம் செய்த காதலியை சுடுவதுபோல் எதிரியை கொல்ல வேண்டும்: சர்ச்சையில் ராணுவ அதிகாரி
https://www.facebook.com/esoftjaffna/

துரோகம் செய்த காதலியை சுடுவதுபோல் எதிரியை கொல்ல வேண்டும்: சர்ச்சையில் ராணுவ அதிகாரி

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரி ஒருவர் பயன்படுத்திய வார்த்தைகளால் அவர் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் கடந்த ஏப்ரல் மாதம் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், ராணுவ உயர் அதிகாரி ஒருவர் பிற வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அப்போது, ‘காதலியின் படுக்கையில் மற்றொரு வாலிபர் இருந்தால் நாம் என்ன செய்வோம்? துரோகம் செய்த காதலியை சுட்டு வீழ்த்துவோம். இதே போல் நமது எதிரிகளையும் சுட்டு வீழ்த்த வேண்டும்’ என அந்த உயர் அதிகாரி கூறியுள்ளார்.

இவ்வீடியோவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த உயர் அதிகாரி பயிற்சி முகாமில் இருந்து கடந்த மே மாதம் வெளியேற்றப்பட்டார்.

எனினும், இவ்விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. சுவிஸ் ராணுவத்தை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய அதிகாரியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கிரீன் மற்றும் எஸ்.பி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

’உயர் அதிகாரியான இப்பேச்சால் சுவிஸ் ராணுவத்தில் என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை தெளிவாக கணிக்க முடிகிறது’ என சில அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ராணுவ உயர் அதிகாரி மீதான விசாரணை தொடங்கியுள்ள நிலையில் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Check Also

ஒரு ஆணின் வாழ்க்கையில் இந்த ஏழு தருணங்களில் பெண் இருக்கிறாள்

நீரின்றி அமையாது உலகு என்பதை போல ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ்வொரு ஆணின் …

Leave a Reply

Your email address will not be published.