Wednesday , April 25 2018
Breaking News
Home / latest-update / துப்பாக்கி குண்டுகள் துளைத்தும் குழந்தையை பெற்றெடுத்த வீரத்தாய்…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

துப்பாக்கி குண்டுகள் துளைத்தும் குழந்தையை பெற்றெடுத்த வீரத்தாய்…!

இந்தியாவில் ஜம்மு நகரின் புறநகர்ப் பகுதியான கென்னி என்ற இடத்தில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் அதிகாலை அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ் இ மொகமது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

தீவிரவாதிகளுடனான சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
military
இதற்கிடையே, தீவிரவாதிகள் தாக்குதலின் போது துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை ராணுவத்தினர் மீட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது என வத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.




இதுதொடர்பாக அந்த பெண்மணி கூறுகையில், என்னையும், எனது குழந்தையையும் காப்பாற்றிய ராணுவ வைத்தியர்களுக்கு  நன்றி என்றார்.

இதுகுறித்து வைத்தியர்கள்  கூறுகையில், துப்பாக்கி குண்டுகள் பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற கடுமையாக போராடினோம். அவருக்கு பிறந்த பெண் குழந்தை எங்களது குழுவினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

mom

Check Also

சிபிராஜின் அடுத்த படம்

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ‘சத்யா’ படத்துக்குப் …