Breaking News
Home / latest-update / தீயில் கருகிய வேட்பாளரின் வாகனம்..!!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தீயில் கருகிய வேட்பாளரின் வாகனம்..!!!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் வாகனம் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபைக்கு களுதாவளை பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




களுதாவளை – வன்னியார் வீதியில் உள்ள வேட்பாளர் குணராசா ஜெகதீஸ்வரன் என்பவரின் வாகனமே இவ்வாறு தீயிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் வாகனம் தீயிடப்பட்டுள்ளதாகவும், இதில் சிறிய கன்டர் வாகனம் முற்றாக தீயில் எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Check Also

ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் – விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் என்று கூறியிருக்கிறார். #Petta #Rajini #VijaySethupathi …