Breaking News
Home / latest-update / தரவரிசையில் முதல் இடத்திற்கு குறிவைக்கும் ரோஜர் பெடரர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தரவரிசையில் முதல் இடத்திற்கு குறிவைக்கும் ரோஜர் பெடரர்

கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 20 முறை கைப்பற்றி உலக சாதனைப் படைத்திருக்கும் ரோஜர் பெடரர் டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 11-வது முறையாயாக சாம்பியன் பட்டம் வென்ற நடால் முதல் இடத்தில் உள்ளார்.

பெடரர் மியாமில் நடைபெற்ற போட்டியில் மார்ச் 24-ந்தேதி விளையாடினார். அதன்பின் நடைபெற்ற செம்மண் போட்டிகளை தவிர்த்து புல்தரை போட்டிக்கு தயராகி வருகிறார்.

விரைவில் ஸ்டட்கார்ட் ஓபன் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் முதல் இடத்தை பிடித்துவிடலாம். இதனால் எப்படியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் 36 வயதான பெடரர் உள்ளார்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …