Breaking News
Home / latest-update / தமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘குற்றம் 23’. இந்த திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது ‘தடம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.



இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், ‘தடம்’ படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மகிழ் திருமேனி, அருண் விஜய் கூட்டணியில் உருவான “தடையறத்தாக்க” பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது ‘தடம்’ படத்தின் டப்பிங் இன்று துவங்கியது. இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Check Also

சீனாவில் கார் விபத்தின்போது வரிசையாக 28 லாரிகள் மோதல் – 3 பேர் பலி

சீனாவின் ஹேனான் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த கார் விபத்தின் எதிரொலியாக 28 லாரிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் …