Breaking News
Home / latest-update / தனியார் பேருந்துகள் நாளை சேவைப்புறக்கணிப்பு!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

தனியார் பேருந்துகள் நாளை சேவைப்புறக்கணிப்பு!!

தனியார் பேருந்துகள் நாளை நள்ளிரவு முதல் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தாம் கோரிக்கை விடுத்த பேருந்து கட்டண சீர்திருத்த்திற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்காது, கட்டணத்தை 6.56 வீதமாக அதிகரிக்கவும், ஆரம்பக் கட்டணத்தில் எவ்விமாற்றமும்
செய்யாமல் தீர்மானம் எடுத்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து பேருந்துக் கட்டணத்தை 15 முதல் 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் தமது கோரிக்கைக்கு அமைவாக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்துள்ளது என்று அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Check Also

4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சார்ந்த தகவலை தொடர்ந்து லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருக்கிறது. …