Breaking News
Home / latest-update / டெஸ்ட் போட்டியில் தடுமாறும் இலங்கை அணி!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

டெஸ்ட் போட்டியில் தடுமாறும் இலங்கை அணி!

பங்காள தேசம் – இலங்கை இடையிலான சிட்டகாங் முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் 2-வது டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் அகிலா தனஞ்ஜெயா முதல் முறையாக டெஸ்ட் அணியில் அறிமுகமானார். வங்காள தேச அணியில் அப்துர் ரசாக் சேர்க்கப்பட்டார்.




இந்நிலையில் குசால் மெண்டிஸ், கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வங்காள தேசம் சுழற்பந்து வீச்சாளருடன் ஆட்டத்தை தொடங்கியது. கருணாரத்னே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா 19 ரன்னிலும், குணதிலகா 13 ரன்னிலும், சண்டிமல் ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும் மறுமுனையில் விளையாடிய குசால் மெண்டில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 68 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பியனார்.

6-வது வீரராக களம் இறங்கிய ரோசன் சில்வா சிறப்பாக விளையாடினார். அவர் 56 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இலங்கை அணி 65.3 ஓவரில் 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.. பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா 31 ரன்கள் எடுத்தும், அகிலா தனஞ்ஜெயா 20 ரன்கள் எடுத்துள்ளனர்.

வங்காள தேச பந்து வீச்சாளர்களில் அப்துர் ரசாக், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களும், முஷ்டாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …