Breaking News
Home / latest-update / டெஸ்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்துவதே இலக்கு: அஸ்வின்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

டெஸ்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்துவதே இலக்கு: அஸ்வின்

டெஸ்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்துவதே இலக்கு: அஸ்வின்

நாக்பூர்:

டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி உலக சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின் நிருபர்களிடம் கூறியதாவது:-

300 விக்கெட்டுகளை இரண்டு மடங்காக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 600 விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எனது இலக்காகும். இதுவரை 54 டெஸ்டுகளில் விளையாடி உள்ளேன்.

சுழற்பந்து வீச்சு எளிதானது அல்ல. தற்போது வீரநடைபோல் எழுந்து இருப்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அதற்கு பின்னால் நிறைய இருக்கிறது. நானும், ஜடேஜாவும் அதிகமான ஓவர்கள் வீசினோம். இதனால் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு உதவியாக இருந்தது.

இவ்வாறு அஸ்வின் கூறி உள்ளார்.

டெஸ்டில் சாதனை படைத்து வரும் அஸ்வின் ஒரு நாள் போட்டியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

தொடர்ச்சியாக 4 ஒருநாள் தொடரில் (இலங்கை), ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை) அஸ்வின் கழற்றி விடப்பட்டுள்ளார். ஜடேஜாவுக்கு இதே நிலைமை தான்.

Check Also

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் …