Breaking News
Home / விளையாட்டு / IPL T20 - 2018 / சென்னைக்கு முதல் தோல்வி * 4 ரன்னில் பஞ்சாபிடம் வீழ்ந்தது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சென்னைக்கு முதல் தோல்வி * 4 ரன்னில் பஞ்சாபிடம் வீழ்ந்தது

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 198 ரன்னை சேஸ் செய்த சென்னை அணி 4 ரன்னில் பரிதாபமாக தோற்றது. கேப்டன் தோனி 44 பந்தில் 79 ரன் விளாசினார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி-20’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள மொகாலி மைதானத்தில் நேற்று இரவு நடந்த 12வது லீக் ஆட்டத்தில் சென்னையை எதிர்த்து பஞ்சாப் மோதியது. இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் காயமடைந்த ரெய்னாவுக்கு பதில் முரளி விஜய் தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாப் அணியில் ஸ்டாய்னிஸ், அக்சர் படேல் நீக்கப்பட்டு கிறிஸ் கெய்ல், பரிந்தர் ஸ்ரண் தேர்வாகினர்.

பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். குறிப்பாக சென்னை பந்து வீச்சை கெய்ல் நாலா, புறமும்   பறக்கவிட உள்ளூர் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஒரு ஓவருக்கு மிக எளிதாக 10 ரன்களுக்கு மேல் எடுத்து வந்தனர், கெய்லுடன் ராகுலும் தன்னை இணைத்துக் கொள்ள ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. கெய்ல் 22 பந்தில் அரைமதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 (8 ஓவர்) சேர்த்த நிலையில், ஹர்பஜன் சிங் ‘சுழலில்’ ராகுல் ஆட்டமிழந்தார். இவர் 37 (22 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். அடுத்து வந்த அகர்வாலும் விளாச பஞ்சாப் அணி 8.4 ஓவரில் 100 ரன் எடுத்தது. இதவால் இப்போட்டியில் பஞ்சாப் பெரிய ஸ்கோரை பதிவு செய்யம் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

முக்கிய கட்டத்தில் வாட்சன் அணிக்கு திருப்பு முனை தந்தர். இவரது வேகத்தில் கிறிஸ் கெய்ல் 63 ரன் (33 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். முதற்கட்ட ஓவரில் சொதப்பி இம்ரானன் தாகிர் கடைசி கட்டத்தில் அகர்வால் (30), ஆரோன் பின்ச் (0) விக்கெட்டை வீழ்த்தினார். ஷர்துல் தாக்கூர் பந்தில் யுவராஜ் சிங் (20), கேப்டன் அஷ்வின் (14) வெளியேறினர். பிராவோ வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் கருண்நாயர் (29) ஆட்டமிழந்தார். முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன் குவித்தது. ஆண்ட்ரூ டை (3), பரிந்தர் ஸ்ரண் (0) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை தரப்பில் இம்ரான் தாகிர், ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஹர்பஜன் சிங், வாட்சன், பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய சென்னை அணிக்கு துவக்கிய சென்னை அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. மோகித் சர்மா வேகத்தில் வாட்சன்  (110 சரிந்தார். ஆன்ட்ரூ டை பந்தில் முரளி விஜய் (17) நடையை கட்டினார். கோல்கட்டாக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்திய பில்லிங்ஸ் இம்முறை அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 9 ரன் மட்டுமே எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய அம்பதி ராயுடுவுடன் கேப்டன் தோனி இணைந்தார். இவரும் மிக நிதானமாக விளையாட ஒரு ஓவருக்கு 11 ரன்னுக்கு மேல் தேவைப்பட்டது. 12வது ஓவரின் முடிவில் சென்னை 100 ரன்      எடுத்தது. முக்கிய கட்டத்தின் அஷ்வினால் அம்பதி ராயுடு ரஜ் அவுட் செய்யப்பட்டார். ராயுடு 49 ரன் (35 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

அடுத்து ஜடேஜா களம் வந்தார். 5 ஓவரில் 76 ரன் தேவைப்பட தோனி சற்றே அதிரடியில் இறங்கினார். இவர் 34 பந்தில் அரைசதம் அடித்தார். 2 ஓவரில் 36 ரன் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 19வது ஓவரை ஆன்ட்ரூ டை வீசினார். இந்த ஓவரின் 2வது பந்தில் ஜடேஜா (19) வெளியேற, பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே பிராவோ களம் வந்தார். அடுத்த நான்கு பந்தில் தோனி, 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 18 ரன் எடுத்தார். இதனால், கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. இதே நிலைதான் மும்பைக்கு எதிரான போட்டியிலும் இருந்தது நினைவிருக்கும்.

கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். முதல் பிந்தில் பிராவோ ஒரு ரன் எடுத்தார். 5 பந்து மீதமுள்ள நிலையில், தோனி அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மோகித் சர்மா அபாரமாக பந்து வீசினார். இதனால் இந்த ஓவரில் 12 ரன்னே விட்டுக் கொடுத்தார். கடைசி பந்தில் தோனி சிக்சர் அடித்த போதும் சென்னை அணி 4 ரன்னில் பரிதாபமாக தோற்றது. சென்னை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. தோனி 79 (44 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), பிராவோ 1 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார்.

Check Also

கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் விண்டோஸ் இயங்கக்கூடிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #GooglePlayStore #Apps கூகுள் பிளே ஸ்டோர் …