Breaking News
Home / latest-update / சுவிஸ்குமாரைத் தப்ப வைத்த சிறிகஜனுக்கு நடக்கப் போவது என்ன?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சுவிஸ்குமாரைத் தப்ப வைத்த சிறிகஜனுக்கு நடக்கப் போவது என்ன?

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச்சென்றமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகவுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது கைதாகி தற்போது பிணையில் உள்ள வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முன்னிலையாகியிருந்தார்.இதேவேளை இந்த வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அறிக்கையினை அரச சட்டவாதி நிசாந்த இன்று (05) மன்றில் சமர்ப்பித்ததுடன் அது தொடர்பான சட்ட மா அதிபரின் விளக்கத்தினையும் மன்றில் தெரிவித்தார்.

இதேவேளை இவ்வழக்கில் முக்கிய சந்தேகநபரும், சம்பவம் இடம்பெற்றவேளை யாழ் பொலிஸ் பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றி வந்தார்.தற்போது தலைமறைவாக இருந்துவரும் சிறிகஜன் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையினை நீதிபதி இதன்போது பிறப்பித்தார்.அத்துடன், இவ்வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …