Thursday , February 22 2018
Breaking News
Home / latest-update / சிலாபம் முன்னேஸ்வரத்தில் கண்கள் கலங்கும் நேர்த்திகள்
https://www.facebook.com/esoftjaffna/

சிலாபம் முன்னேஸ்வரத்தில் கண்கள் கலங்கும் நேர்த்திகள்

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்று விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று நடைபெற்றது.

இதன்போது ஸ்ரீவடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர், பரிவார மூர்த்திகளுடன் பஞ்ச இரதங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அரோஹரா கோஷத்துடன் அடியார்கள் வடம் பிடித்து இழுக்க, நகரைச் சுற்றி பஞ்ச இரதங்களும் பவனி வந்தன.

இதில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

அத்தோடு, இந்துசமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான முன்னேஸ்வரத்தின் மகோற்சவம், நாளை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆணியில் பாதனி செய்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்…

Check Also

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்

கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் …

Leave a Reply

Your email address will not be published.