Breaking News
Home / latest-update / சர்வதேசரீதியில் சாதனை படைத்த யாழ். பல்கலைக்கழக மாணவன்! (Photos)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சர்வதேசரீதியில் சாதனை படைத்த யாழ். பல்கலைக்கழக மாணவன்! (Photos)

யாழ்.பல்கலைக்கழக தொழினுட்பபீட முதலாம் வருட மாணவனான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருதும், உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


இக்கண்காட்சி போட்டி கடந்த 01 திகதி தொடக்கம் 06 ஆம் திகதிவரை தாய்லாந்தின் பேங்கொக் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. வினோஜ்குமார் கண்டுபிடித்த “கணித உதவியாளன்” எனும் கணித கருவி கணித பாடத்தில் வரும் நிறுவல்கள் மற்றும் திசை கொண்ட எண்கள் போன்ற பல விடயங்களை இலகுவாக கற்பிக்கக்கூடிய உபகரணமாகும்.
இதன் மூலம் அனைத்து மாணவர்களும் பிறரின் உதவியின்றி இலகுவாக கற்கமுடியும் என்பதோடு இது செலவு மிகக்குறைந்த கண்டுபிடிப்பாகும்.
மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளித்தொழினுட்ப மூலம் மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இதன் மூலம் தோன்றும் ஒளியினால் இலகுவாக கற்கக்கூடியதாக இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சர்வதேச விருதை பெற்ற இக்கண்டுபிடிப்பு 2017 ஆம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நடாத்திய “ஆயிரம் படைப்புக்கள்” கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வினோஜ்குமார் கருத்து தெரிவிக்கையில் “நான் தரம் 6 யில் இருந்தே கண்டுபிடிப்புதுறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தின ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் ஒன்றில் சூழலில் அன்றாடம் காணும் பிரச்சினைகளை குறிப்பு எடுத்து அதனை பரிசோதனை ரீதியாக ஓய்வு நேரங்களில் அதனை செய்து பார்ப்பேன். மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளையும் விரும்பிப்படிப்பேன்.


எனது பாடசாலைகளான சம்மாந்துறை கமுஃசதுஃமுஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கும், சம்மாந்துறை கமுஃசதுஃஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் மற்றும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு மேலும் இலங்கை புத்தாக்குனர் ஆணையாளர் மகேஷ் எதிரிசிங்க சேர் அவர்களுக்கும் உதவி ஆணையாளர் கல்பணி ராஜபக்ஸ அவர்களுக்கும் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன சேர் அவர்களுக்கும் யாழ்.பல்கலைகழக பேராசிரியர் கந்தசாமி சேர் அவர்களுக்கும் தென்கிழக்கு பல்கலைகழக பேராசியர் முசாதிக் சேர் அவர்களுக்கும் இலங்கை றப்பர் ஆராய்ச்சியாளர் மகாநாம அவர்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.”

இக்கண்காட்சி போட்டிக்கான முழு வசதிகளையும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும், விஞ்ஞான தொழினுட்ப ஆராய்ச்சி அமைச்சும் ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கண்டுபிடிப்பு டுமுஃPஃ19721 எனும் இலக்கத்தின் கீழ் ஆக்கவுரிமை பத்திரத்தையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும். இதுவரை 81 கண்டுபிடிப்புக்களை செய்த இவர் 3 சர்வதேச விருதுகளையும் 31 தேசிய விருதுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது


Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …