Breaking News
Home / latest-update / சந்திரக்கிரகண வீடியோவில் சிக்கியது பறக்கும் தட்டுக்களா..?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சந்திரக்கிரகண வீடியோவில் சிக்கியது பறக்கும் தட்டுக்களா..?

152 வருடங்களுக்குப் பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் கடந்த 31-ஆம் திகதி அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது.

இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்யேக கேமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது.

அந்த வீடியோவில் சந்திரனை பூமி மறைக்கும் அற்புத காட்சிகள் நடந்த தருணத்தில் சந்திரனுக்கு இடது புறத்தில் ஒரு வெளிச்சமான மர்ம பொருள் யாரும் கணிக்க முடியாத வேகத்தில் கடக்கிறது.

அந்த பொருள் என்னவென்று தெரியவில்லை.
மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எனவே அவை ஏலியன்களின் பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து இன்னும் நாசா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …