Breaking News
Home / latest-update / சத்தீஸ்கரில் செல்போன் வெடித்து 12 வயது சிறுவன் பலி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சத்தீஸ்கரில் செல்போன் வெடித்து 12 வயது சிறுவன் பலி

சத்தீஸ்கரில் செல்போன் வெடித்து 12 வயது சிறுவன் பலி
சிறுவர்கள் இப்போது செல்போனில் அதிகம் வீடியோ கேம் விளையாடுகிறார்கள். இதனால் செல்போனில் சார்ஜ் குறைந்து விடுகிறது. சார்ஜ் போட்டுக் கொண்டே விளையாடுகிறார்கள்.

இது ஆபத்து என்பதை உணராமல் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ரவி சோன்வான் குத்ராப்பரா கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்தான்.

வெகு நேரம் விளையாடியதால் சார்ஜ் குறைந்து கொண்டே போனது. இதனால் மின்சார பிளக்கில் சார்ஜ் போட்டபடியே விளையாட்டை தொடர்ந்தான். ஏற்கனவே சூடாகி இருந்த செல்போன் சார்ஜ் போட்டதால் மேலும் சூடாகி திடீர் என்று வெடித்தது. குறைந்த சக்தி கொண்ட வெடி பொருள் வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது.

சிறுவன் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவனுடன் வேடிக்கை பார்த்த மற்றொரு சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிறுவன் ரவிக்கு காயம் அதிகம் இருந்ததால் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம் காரணமாக சிறுவனை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறிது நேரத்தில் சிறுவன் ரவி இறந்தான்.

மற்றொரு சிறுவனுக்கு லேசான காயம் என்பதால் உயிர் தப்பினான்.

செல்போன் வெடிகுண்டு போல் வெடித்து சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Check Also

கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் விண்டோஸ் இயங்கக்கூடிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #GooglePlayStore #Apps கூகுள் பிளே ஸ்டோர் …