Breaking News
Home / latest-update / கோப்பாய் பாலத்தடியில் ஆசிரியர் ஒருவரின் சடலம்.. (photos)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கோப்பாய் பாலத்தடியில் ஆசிரியர் ஒருவரின் சடலம்.. (photos)

யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்தடியில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

 

குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சரிந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

Np .HP-6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Np .HP-6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் வயது 49 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார்.

இவர் யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்பபாடசாலையின் ஆசிரியருமாவார்.

இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …