Sunday , February 18 2018
Breaking News
Home / latest-update / கொய்யாவில் மறைந்திருக்கும் அற்புதங்கள்
https://www.facebook.com/esoftjaffna/

கொய்யாவில் மறைந்திருக்கும் அற்புதங்கள்

கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. உண்மையில் கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன, அவற்றில் சிலவகை தடித்த தோலுடனும், சிலவகை மெல்லிய தோலுடனும் காணப்படும்.

கொய்யாபழத்தில் வைட்டமின் B மற்றும் C ஆகிய உயிர்ச்சத்துக்களும்,கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் கொட்டிக் கிடக்கின்றன.




கொய்யாப் பழங்களிலும், விதையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

கொய்யா இலையை வாயில் இட்டு மென்று, அப்படியே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும், ஆடும் பற்கள் கெட்டிப்படும், பற்சொத்தை நீங்கும், பல் வலி குணமாகும் பல்லில் உள்ள கறைகள் நீங்கி பற்கள் வெண்ணிறமாகும்

முகத்தில் ஏற்படும் தோல் வறட்சியை நீக்கி பொலிவை தரும். கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.




இன்றைய உணவுகளில் இரசாயன கலப்பு அதிகம் இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் உள்ளுறுப்புகளாகிய செரிமான உறுப்புகள் பலப்படும். மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தினம் சாப்பிட்டு பயன் பெறலாம்.

கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

உலகமே நடுங்கும் வியாதியான புற்றுநோயை கூட தடுக்கும் சக்தி கொய்யாவுக்கு உண்டு. புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொய்யாவில் நிறைந்து இருகின்றன. புற்றுநோய் இருபவர்கள் கொய்யாவை தினம் சாப்பிட்டு வந்தால் நோயின் தன்மை குறையும்.

குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் C சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது குழந்தைகளுக்கு கொய்யா கொடுத்து வந்தால் எலும்புகள் பலப்படும் உடல் வளர்ச்சி அடைவதோடு பற்களும் பலமடையும்.




உடலின் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியடைச் செய்யும். பசியே எடுக்காதவர்கள் நன்கு பழுத்த கொய்யாப் பழம் ஒன்று சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஆண்களின் விந்தணுகளை பெருக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு.

கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதே போன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் அளவோடு சாப்பிடவும் (சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்).

இரத்தச் சோகை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் 48 நாட்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள இரும்புச் சத்து இரத்தச் சோகை குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுப்பதுடன் இரத்தத்தை சுத்திகரித்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும்.

 

About admin

Check Also

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவில் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *