Breaking News
Home / latest-update / குணரத்ன வானவேடிக்கை! கடைசி பந்தில் திரில்! அஸி தொடரை கைப்பற்றியது இலங்கை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

குணரத்ன வானவேடிக்கை! கடைசி பந்தில் திரில்! அஸி தொடரை கைப்பற்றியது இலங்கை

அவுஸ்திலேியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி அசத்தல் வெற்றிப்பெற்றது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றியுள்ளது.

Geelong மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக அவுஸ்திரேலிய வீரர் Henriques இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் குலசேகர நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கடைசி ஓவரை வீசிய குலசேகர மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனினும், இலங்கை வீரர்கள் பல கேட்ச்களை தவறவிட்டது பந்துவீச்சாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதனையடுத்து 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி, கடைசியில் குணரத்னாவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது.

கடைசி பந்தில் இலங்கை வெற்றிக்கு இரண்டு ஓட்டங்கள் தேவைபட்ட நிலையில் குணரத்ன பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை வீழத்தி டி20 தொடரை கைப்பற்றியது.

இலங்கை தரப்பில குணரத்ன ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்கள் குவித்தார். அவுஸ்திரேலிய தரப்பில் Tye மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …