Breaking News
Home / latest-update / கிளிநொச்சியில் கொட்டித் தீர்க்கும் அடை மழை….!! நிரம்பி வழியும் குளங்கள்…..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கிளிநொச்சியில் கொட்டித் தீர்க்கும் அடை மழை….!! நிரம்பி வழியும் குளங்கள்…..!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய கடும் வறட்சிக்குப்பின்னர் தற்போது பெய்து வரும் மழையினால் குளங்களின் நீர் மட்டம் சற்று உயர்வடைந்துள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்திற்குள் எட்டு மில்லி மீற்றர் மழை பதிவாகியிருப்பதாக நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய கடும் வறட்சிக்குப் பின்னர் தற்போது பருவமழை பெய்ய ஆரம்பித்திருக்கின்றது. இந்நிலையில் குளங்களின் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது.இந்நிலையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்

கடந்த 24 மணி நேரத்திற்குள் எட்டு மில்லிமீற்றர் மழை பதிவாகியிருப்பதாகவும், இரணைமடுக்குளத்தின் நீர் 16அடி 3 அங்குலமாகக் காணப்படுகின்றது.கரியாலை நாகபடுவான் குளத்தின் நீரமட்டம் 2 அடி 11 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாகவும் கடந்த 24 மணிநேரத்தில் 52.2 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.

அக்கராயன்குளத்தினுடைய நீர் மட்டம் 9அடி 9அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக 7.5மில்லிமீற்றர் மழைபதிவாகியுள்ளது.குடமுருட்டிக்குளத்தினுடைய நீர் 1அடி 6 அங்குலாக காணப்படுவதாக நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

6 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

கொழும்பிலிருந்து வெலிமடையை நோக்கி பண்டாரவளை ஊடாக பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் …