
மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றில், வைத்தியர்களான கணவன் மற்றும் மனைவி வாடகைக்கு குடியிருக்கின்றனர். இவர்களது வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு பிறந்த சிசுவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிசு, கடந்த 27ஆம் திகதி பிறந்துள்ளதாகவும், கொலைச் செய்யப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சிசுவின் தாய், தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.