Breaking News
Home / latest-update / கால்பந்து தரவரிசையில் 70-வது இடத்துக்கு சரிந்தது ரஷியா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கால்பந்து தரவரிசையில் 70-வது இடத்துக்கு சரிந்தது ரஷியா

கால்பந்து தரவரிசையில் 70-வது இடத்துக்கு சரிந்தது  ரஷியா

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் முதல் 7 இடங்களில் மாற்றம் இல்லை. உலக சாம்பியன் ஜெர்மனி முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும், பெல்ஜியம் 3-வது இடத்திலும, போர்ச்சுகல் 4-வது இடத்திலும், அர்ஜென்டினா 5-வது இடத்திலும் தொடருகிறது.
ஆஸ்திரியாவுக்கு எதிரான நட்புறவு போட்டியில் 0-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியாவுக்கு தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணி 4 இடங்கள் சரிந்து 70-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த உலக கோப்பையில் களம் காணும் 32 அணிகளில் ரஷியாவே தரவரிசையில் பின்தங்கிய அணியாகும். இதற்கு அடுத்து சவுதி அரேபியா 67-வது இடத்தில் இருக்கிறது.  #FIFA #Russia

Check Also

யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி பாலத்தினுள் இறுகிய பாரவூர்தி!!

சற்று நேரத்தின் முன் யாழ் நவீன சந்தைக் கட்டடங்களை இணைக்கும் பாலத்தின் அடியில் பாரவூர்தி ஒன்று சிக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த …