Breaking News
Home / latest-update / கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் போது இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் போது இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?

நம் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிற கண்ணாடியாக இருப்பது நம்முடைய முகம் தான். ஒருவரைப் பார்த்து பேசும் போதே அவர் உற்சாகமாக இருக்கிறாரா என்பதை முதற்கொண்டு நம்மால் கண்டறிய முடிகிறது. உடலில் மற்றும் மனதளவில் ஏற்படும் சின்ன மாற்றங்களைக் கூட நம் முகம் சின்ன சின்ன அறிகுறிகளாக காட்டும். ஆனால் அவற்றை பெரிதாக நாம் கண்டுகொள்வதில்லை.

தேவையற்ற முடிகள் : பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் தோன்றினால் உங்களுக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் ஏற்ப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இது உடலில் ஆண்ட்ரோஜன் அதிகப்படியாக சுரப்பதால் உண்டாகிறது. பார்லருக்குச் சென்று முடியை அகற்றுவதற்கு முன்னதாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

பரு : பெரும்பாலானோருக்கு வரக்கூடியது யாருமே இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். முகத்தில் பரு தோன்றுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று உங்களுடைய உணவுப்பழக்கம். நீங்கள் என்ன தான் சுத்தமாக முகத்தை பராமரித்தாலும் நீங்கள் சாப்பிடும் உணவுகளாலும் பருக்கள் தோன்றிடும். அதிகப்படியான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் எடுத்துக் கொண்டால் அவை சருமத்தில் எண்ணெய் சுரப்பதை அதிகரிக்கும். அதே போல ஜங்க் ஃபுட் சாப்பிடுவதாலும் ஏற்படும். சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றாலோ உணவு செரிப்பதில் பிரச்சனை உண்டானாலும் முகத்தில் பருக்கள் உண்டாகும்.

கருவளையம் : கருவளையம் இருந்தாலே இரவில் சரியாக தூங்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறோம். அது ஒரு காரணம் என்றாலும் இன்னொரு மிகப்பெரிய காரணம் நீங்கள் சாப்பிடும் உணவு அதிக அமிலத்தன்மை வாய்ந்த உணவாக இருந்தாலும் உங்களுக்கு கருவளையம் தோன்றிடும். அதிக காரமுள்ள, மசாலா உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள்.

பொரிப்பொரியாக வருவது : முகத்தில் பொரிப்பொரியாக சின்ன சின்ன பருக்கள் தோன்றும். இது ஏதேனும் அலர்ஜியாக இருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால் இதற்கு காரணம் உடலில் விட்டமின் ஏ, ஜிங்க் அல்லது ஃபேட்டி ஆசிட் பற்றாகுறை உண்டானால் இப்படித் தோன்றிடும். சத்தான காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட முகத்தில் பொரிப்பொரியாக முகத்தில் வந்த பருக்கள் குறைந்திடும்.

உதடு : உதடுகளில் புண் உண்டாவது, அல்லது வறட்சியுடன் வெடிப்புகள் உண்டானால் அதற்கு காரணம் உடலில் போதுமான அளவு தண்ணீர்ச் சத்து இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு முக்கிய காரணம் உடலில் நியாசின் மற்றும் ஹிங்க் பற்றாகுறை இருந்தாலும் இப்படியே தோன்றிடும். அசைவ உணவுகளில் இந்தச் சத்துக்கள் அதிகமிருக்கின்றன.

புருவங்கள் : புருவ முடி மிகவும் அடர்த்தி குறைவாகவோ அல்லது புருவ முடி உதிர்ந்தால் அதற்கு காரணம், உங்களுக்கு தைராய் சுரப்பி சுரப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். குறைவாக சுரந்தால் இப்பிரச்சனை ஏற்படும்.

சரும வறட்சி : சருமம் வறட்சியாக இருந்தால் அதற்கு ஒரே தீர்வாக தண்ணிர் சத்து இல்லை நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லப்படுகிறது. இதைத் தவிர கரையக்கூடிய கொழுப்பு,ஒமேகா3 ஃபேட்டி ஆசிட்,லினோலெனிக் ஆசிட் போன்றவை பற்றாகுறையாக இருந்தாலும் சரும வறட்சி ஏற்படும்.

முகச்சுருக்கம் : சருமத்தில் முகச்சுருக்கம் வயதாவதால் ஏற்படுகிறது என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் உண்மைக்காரணம் என்ன தெரியுமா? நம் உடலில் விட்டமின் சி பற்றாகுறை ஏற்படும் போது முகத்தில் சுருக்கங்கள் உண்டாகிறது. சுருக்கங்களை தவிர்க்க விதவிதமான க்ரீம்களை பயன்படுத்துவதை விட விட்டமின் சி அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …