Breaking News
Home / latest-update / கணவன், மனைவி மீது வாள் வெட்டு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கணவன், மனைவி மீது வாள் வெட்டு

வீடு புகுந்த வாள் வெட்டுக் கும்பல் கணவன், மனைவி மீது கொலை வெறித்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பருத்தித்துறை பொலிஸ் பிரிவினர் இன்று (29) காலை தெரிவித்துள்ளனர்.

வீடு புகுந்த வாள் வெட்டுக் கும்பல், உறக்கத்தில் இருந்த கணவன், மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சி, குடத்தனையில் இன்று அதிகாலையில் 4.30 மணி அளவில் இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 50 வயதுடைய எம். சித்திர வடிவேல் என்பரும் 40 வயதுடைய அவரது மனைவியான ஜெயந்தி என்பருமே படுகாயத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு எந்த விதமான பதிப்பு ஏற்படவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த கணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது மனைவி தலையில் ஆழமான வெட்டுக்காயத்துடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …