Breaking News
Home / latest-update / ஒவ்வொரு ராசிகாரர்களிடமும் காணப்படும் ஈர்க்கும் குணம் என்னவென்று தெரியுமா…? உங்கள் ராசிக்கு என்ன குணம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஒவ்வொரு ராசிகாரர்களிடமும் காணப்படும் ஈர்க்கும் குணம் என்னவென்று தெரியுமா…? உங்கள் ராசிக்கு என்ன குணம்

ஒவ்வொரு ராசிக்கும் பொது பலன் என்று ஒன்றிருப்பதை போல ஒவ்வொரு ராசியிடமும் காணப்படும் ஈர்ப்புடைய விஷயம் எது என்பது பற்றி பார்க்கலாம்…

மேஷம்

ஒரு பொருள் / செயல் / நபர் / விஷயத்தின் மீதான கட்டுக்கடங்காத உணர்வு அல்லது ஆசை என்பது மேஷ ராசிக்காரர்கள் மத்தியில் காணப்படும் சிறந்த விஷயமாக காணப்படுகிறது.

இவர்கள் வாழ்வில் சுதந்திரமாகவும், உணர்ச்சிவசப்பட்டு துரிதமாகவும் செயல்ப்படக் கூடியவர்கள். ஒரு செயலில் இருந்து அடுத்த செயலில் அல்லது ஒரு செயலின் அடுத்தக் கட்டத்திற்கு சீக்கிரம் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருப்பார்கள். இந்த ஒரு விஷயம் இவர்களிடம் மிகப் பெரிய ஈர்ப்பாக காணப்படும்.



விழுந்தால் அதுகுறித்து கவலைப்பட மாட்டார்கள். ஒரு நபர் நேர்மையாக இருந்தால், தங்கள் பயணித்தின் போது அவர்களை விட்டு விலக மாட்டார்கள்.

ரிஷபம்

நிறைய பேர் தேடுவது இப்படி ஒரு நபரை தான். தன்னிடம் கொடுக்கப்படும் எந்த வேலையையும் கச்சிதமாக முடிக்கும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள். ரிஷப ராசிக்காரர்களிடம் விடா முயற்சியும், தலைமை ஏற்கும் குணமும் இருக்கும். இதன் மூலம் அவர்கள் பெரிய வெற்றியை நிச்சயம் அடைவார்கள்.

எந்தவொரு விஷயமாக இருந்தாலும், தானாக முன்வந்து செய்வார்கள். அதிலும் தங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு என்றால் கேள்வி கேட்காமலே முன்வந்து உபசரித்து மகிழ்வார்கள். தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தங்களுக்கு மட்டுமே என்று நினைக்காமல், தங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். இந்த வெற்றியும், பணிவுமே இந்த ராசியினரிடம் மற்றவர்கள் பெரிதாக காணும் ஈர்பாகும்.



மிதுனம்

நல்ல திருப்புமுனை கொண்ட கதை ஒன்றினை அறிய விரும்பும் மக்களுக்கு மிதுன ராசிக்காரர்களை பிடிக்க வாய்புகள் உண்டு. சிலரது வாக்கு அப்படியே நடக்கும் என்பார்கள். நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி… இவர்கள் நாக்கு கொஞ்சம் ஷார்ப்பானது… அழகானதையும் கூறும், விஷத்தையும் கக்கும். மேலும், மிதுன ராசிக்காரர்கள் கழுவுற மீனில் நழுவுற மீன் வகை.

அவர்கள் கூறும் கதைகளில் மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கை நகர்த்தும் முறையிலும் இதை கூறலாம். அவர்களது வாழ்வில் சுவாரஸ்யமான பகுதிகளை மட்டுமே கூறி ஒருவரை மயக்கி விடுவார்கள். அதாவது ஒரு நபரை எப்படி ஈர்க்க வேண்டும் என்ற அறிவும், ஞானமும் கொண்டிருப்பார்கள். இதுவே இவர்களிடம் காணப்படும் ஈர்ப்பான விஷயம்.

கடகம்

எந்த ஒரு விஷயத்தையும் தனித்துவமாக, அந்த இடத்திற்கு ஏற்ப சட்டென்று மாற்றி யோசித்து முடிவெடுக்கும் திறன் இவர்களிடம் இருக்கும். அட எப்படி இவங்க மட்டும் டக்குன்னு இப்படி யோசிக்கிறாங்க என்ற சிந்தனை எழும்.

இவர்களை மதிப்பிடுவதோ, இவர்கள் இப்படி தான் என்று ஒரு வட்டத்திற்குள் கொண்டு வருவதோ மிகவும் கடினம். உங்கள் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால், உங்களுக்கான சிறந்த நபர் இவராக இருப்பார்.



சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் எப்போதுமே இனிமையாக பேசி தங்களை வசீகரமாக வைத்துக் கொள்வார்கள். நீங்கள் அவரிடம் ஒரு விஷயத்தை கேட்க நினைக்கும் முன்னரே அதுகுறித்து உங்களிடம் பேச துவங்கிவிடுவார். இயற்கையாகவே அவர்கள் செயலில் இதமாகவும், ஆற்றல் மிக்க நபராகவும் இருப்பார்கள். இதனால் அனைவரையும் தங்கள் பக்கம் காந்தம் போல ஈர்த்துக் கொள்வார்கள்.

அதே போல சில நேரங்களில், தருணங்களில் தம்பட்டமும், தற்பெருமையும் அடித்துக் கொள்ளும் பழக்கமும் இவர்களிடம் இருக்கும். இதன், மூலம் மற்றவர்கள் தங்களை கவனிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். கவலைப்படாமல் நீங்கள் அவர்களை கவனிக்க துவங்கலாம். ஏனெனில், ஒருவரை பிடிக்கவில்லை எனில் அவர்களுடன் பேச்சுக்கு கூட ஒட்டி உறவாட மாட்டார்கள் சிம்ம ராசிக்காரர்கள்.

கன்னி

நீங்கள் ஒருவரிடம் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும் என்று எண்ணினால், வார்த்தைப் போரில் ஈடுபட கருதினால் அதற்கு சரியான நபர் கன்னி ராசி காரர்கள் தான். ஒரு செயலை வெற்றி கரமாக செய்ய கச்சிதமாக நபர்களாக திகழுபவர்கள்.

இவர்கள் இவர்களது இல்வாழ்க்கைக்கும் பொருந்தும். சவாலை கண்டு அஞ்ச மாட்டார்கள். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனையை கண்டு ஓடாமல் அதற்கான தீர்வை காண முயற்சிக்கும் நபர்கள். இவர்களிடம் எத்தகைய கஷ்டமான வேலையை கொடுத்தாலும் அதை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும்.

மேலும், தங்களுக்கு பிடித்தமான நபர்களுக்காக சண்டைக்கட்டி போராட கங்கணம் கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குவார்கள். இந்த வெற்றி உணர்வும், போராடும் குணமும் இவர்களிடம் காணப்படும் ஈர்ப்பான விஷயம்.



துலாம்

உங்களை ஒருவர் மிக ஆழமாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கு துலாம் ராசிக் காரர்கள் தான் சரியானவர்கள். ஒருவரை சரியாக எடை போட தெரிந்த நபர்கள். வெறுமென இல்லாமல் ஒருவரிடம் பழகி, அவரைப் பற்றி நன்கு அறிந்து, புரிந்து நடந்துக் கொள்ளும் நபர்கள்.

யாரிடம் எதை பேச வேண்டும், பேச கூடாது என்றும், யாரை அனைத்துக் கொள்ள வேண்டும், தள்ளி வைக்க வேண்டும் என்றும் கச்சிதமாக பகுத்தறியும் நபர்கள். ஆனால், இவர்களிடம் உணர்ச்சியும், உறவுகள் சார்ந்த ஏக்கமும் அதிகமாக இருக்கும். இவர்கள் கொஞ்சம் சென்ஸிட்டிவான நபர்களும் கூட. மேலும், ஒரு பிரச்சனையில் இருந்து மன ரீதியாக எப்படி வெளிவர வேண்டும் என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணமாக திகழ்வார்கள்.

விருச்சிகம்

சிலருடன் எத்தனை வருடம் பழகினாலும், அவர் யார், எவர், எப்படிப்பட்டவர் என்று முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது.

இவர்கள் கொஞ்சம் புதிரானவர்கள் தான். ஆனாலும், இந்த உலகை ஒரு கலக்கு, கலக்கும் நபராகவும் திகழ்வார்கள். ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குழப்பமாக இருக்கும், ஆனால், அதன் ரிசல்ட் வியப்படைய செய்யும். வியத்தகு தருணங்களை அனுபவிக்க, கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால், உங்களுக்கான தேர்வு விருச்சிக ராசிக்காரர்களே!



தனுசு

தங்கமான மனசுக் கொண்டிருக்கும் நபரை தேடுபவராக நீங்கள் இருந்தால்… உங்களுக்கான சரியான தேர்வு தனுசு தான். இது இயற்கையாகவே எதையும் விரும்பி செய்யும் நபர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கனிவும், அக்கறையும் கூடுதலாக இருக்கும்.

எதை செய்தாலும் பாசத்துடன், அன்புடன் செய்வார்கள். எதையும் பகிர்ந்துக் கொள்ளவும், மற்றவர் கவலையை தங்களது கவலையாக காணவும் கூச்சப்பட மாட்டார்கள். ஆனால், ஒரு விஷயம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு முறை நீங்கள் அவர்களை ஏமாற்றினாலும், மீண்டும் அவருடன் பழகுவதோ, இணைவதோ மிகவும் கடினம். அன்பும், கனிவும் இவர்களிடம் காணப்படும் ஈர்ப்பான விஷயம்.

மகரம்

பல வேளையில் அமைதி காப்பதே உங்களை மற்றவர் ஈர்ப்புடன் காண பெரும் வழிவகுக்கும். மகர ராசி காரர்களின் பெரிய ஈர்ப்பே அமைதி காப்பது தான்.

இவர்களது அமைதியும், இன்ப, துன்பங்களில் நடுநிலை இழக்காமல் இருப்பதும் தான். ஒருவருக்கான, ஒரு செயலுக்கான மதிப்பை அளிப்பதை இவர்கள் ஒருபோதும் தவற மாட்டார்கள். என்ன? இவர்கள் எதையும் வாய் திறந்து பெரிதாக வெளியே கூற மாட்டார்கள். சில சமயம் இவர்களது அமைதியான குணம் எதற்கும் உதவாமலும் போக வாய்புகள் உள்ளது. இவர்களது நடுநிலையான உணர்வு பெரும் ஈர்ப்புக்குரிய விஷயமாக திகழ்கிறது.



கும்பம்

காரணமே இல்லாமல் சிலர் மீது ஈர்ப்பு வருமே, அதில் முதன்மை இடத்தில் இருப்பவர்கள் கும்ப ராசிக்காரர்களே! இவர்களது பார்வையில் வாழ்க்கை வேறுவிதமாக இருக்கும். சிலர் எடுக்க தயங்கும் முடிவுகளை இவர்கள் மிக சாதரணமாக எடுப்பார்கள். தோல்வியோ, நஷ்டமோ இவர்களுக்கு எந்த விஷமான அச்சத்தையும் அளிக்காது.

மீனம்

விட்டுக் கொடுத்து போவது, வளைந்து கொடுத்து போவது! யாருக்காவது, ஏதாவது தேவை என்றால், அவர்களுக்கா தங்களை தேவைகளை கூட விட்டுக் கொடுத்து போவார்கள். உணர்வு ரீதியாக மிகவும் சென்சிடிவான நபர்கள். சொந்த ஊர், சொந்தக்காரர்கள் என தானிருக்கும் இடம் மற்றும் தன்னை சுற்றி இருக்கும் நபர்கள் மீது அதிக பற்று கொண்டிருப்பார்கள். தன்னை முந்தி செல்லும் நபர் மீதோ, தன்னை வெற்றிக் கொள்ளும் நபர் மீதோ பொறாமை அல்லது பகை உணர்வு கொள்ள மாட்டார்கள்.

இதனால் இவர்களை மிரட்டிப் பார்க்கலாம் என்றும் யாரும் கருதுவிடக் கூடாது, சாது மிரண்டால் நாடு தாங்காது என்பது போல, இவர்களது சாந்தமான குணத்திற்கு பின்னணியில் அசாதாரண வீரியமும் இருக்கும்.


Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …