Breaking News
Home / latest-update / ஐபிஎல் காட்சி கிரிக்கெட்டில் விளையாடும் பெண்கள் அணி அறிவிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஐபிஎல் காட்சி கிரிக்கெட்டில் விளையாடும் பெண்கள் அணி அறிவிப்பு

ஐபிஎல் காட்சி கிரிக்கெட்டில் விளையாடும் பெண்கள் அணி அறிவிப்பு

ஐபிஎல் 11-வது சீசனின் லீக் ஆட்டங்கள் 20-ந்தேதியுடன் முடிவடைகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த பிறகு 22-ந்தேதி பிளேஆஃப்ஸ் சுற்றின் முதல் ஆட்டமான குவாலிபையர்-1, மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு முன்பு பெண்கள் டி20 காட்சி போட்டி ஒன்று நடத்துவதாக பிசிசிஐ முடிவு செய்தது. தற்போது இரண்டு அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு ஐபிஎல் டிரைல்ப்ளேசர்ஸ் என்றும், மற்றொரு அணிக்கு ஐபிஎல் சூப்பர்நோவஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் டிரைல்ப்ளேசர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

1. அலிசா ஹீலி (விக்கெட் கீப்பர்), 2. ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), 3. சுசி பேட்ஸ், 4. தீப்தி ஷர்மா, 5. பெத் மூனி, 6. ஜெமிமா ரோட்ரிக்ஸ், 7. டேனியல்லே ஹசல், 8. ஷிகா பாண்டே, 9. லியா டகுகு 10. ஜூலான் கோஸ்வாமி, 11. ஏக்தா பிஸ்ட், 12. தயாளன் ஹேமலதா, 13. பூணம் யாதவ்.

ஐபிஎல் சூப்பர்நோவஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டேனியல்லே வியாட், 2. மிதலி ராஜ், 3. மெக் லேனிங், 4. ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), 5. ஷோபி டெவைன், 6. எலிசே பெர்ரி, 7. வேதா கிருஷ்ணமூர்த்தி, 8. மோனா மேஷ்ரம், 9. பூஜா வாஸ்டிராகர், 10. மேகன் ஸ்கட், 11. ராஜேஸ்வரி கயாக்வாட், 12. அனுஜா பாட்டீல், 13. தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்).

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …