Breaking News
Home / விளையாட்டு / IPL T20 - 2018 / எழுச்சி பெறுமா கோல்கட்டா?இன்று இரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் கோல்கட்டா, டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

எழுச்சி பெறுமா கோல்கட்டா?இன்று இரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் கோல்கட்டா, டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல்., ‘டுவென்டி&20’ தொடரில் இன்று இரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் கோல்கட்டா, டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபி.எல்.,) ‘டுவென்டி-20’ தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. கோல்கட்டா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள 13வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கோல்கட்டாவை எதிர்த்து டில்லி மோதுகிறது. இப்போட்டி இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்தோடு காணப்படும் கோல்கட்டா அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டியில் ஒரு வெற்றி, 2  தோல்வி அடைந்துள்ளது. பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற கோல்கட்டா அணி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளிடம் வீழ்ந்தது. கோல்கட்டாவைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சற்று வலிமையாக உள்ளது. கிறிஸ் லின், சுனில் நரைன், உத்தப்பா, நிதிஷ் ரானா, கேப்டன் தினேஷ் கார்த்திக், ஆன்ட்ரூ ரசல் என பேட்டிங் வரிசை மிரட்டலாக உள்ளது. இருந்தும் ரானா, லின், சுனில் நரைன் ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதே நேரம் இந்த அணியின் பந்து வீச்சு பலவீனமாகவே உள்ளது. ஜான்சன், ரசல் இருவரின் பந்து வீச்சு  ªடுபடவில்லை. தவிர, சுழலில்’ சுனில் நரைன் மட்டுமே அசத்துகிறார். குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா இருவரும் முக்கிய கட்டத்தில் விக்கெட் வீழ்த்த திணறுகின்றனர். அதோடு, பந்து வீச்சுக்கு பக்க பலமாக பீல்டிங் இல்லை. சொந்த மண்ணில் ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் தோற்றது உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தவிர, கோல்கட்டவில் தற்போது மழை பெய்து வருகிறது. இன்றைய போட்டியிலும் வருண பகவான் குறுக்கீடு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பவுலிங், பீல்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே 2வது வெற்றியை பதிவு செய்வதில் சிக்கல் ஏதும் இருக்காது.

காம்பிர் தலைமையிலான டில்லி அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டியில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் வீழ்ந்த டில்லி அணி நடப்பு சாம்பியன் மும்பையை கடைசி பந்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. டில்லி அணியும் பேட்டிங்கில் வலிமையாக உள்ளது. முதல் இரண்டு போட்டியில் முன்ரோ சொதப்பிய நிலையில், மும்பைக்கு எதிராக ஜேசன் ராய் களம் இறங்கினார். இவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 53 பந்தில் 91 ரன் விளாசி டில்லி அணிக்கு முதல் வெற்றியை தேடித்தந்தார். கேப்டன் காம்பிர், ரிஷாப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்கள் அணியில் இருப்பது பலம்.

அதே நேரம் இந்த ணியும் பந்து வீச்சில் பலவீனமாக உள்ளது. தொடக்கத்தில் பவுல்ட் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார். இதே போல் முகமது ஷமி பந்து வீச்சு முற்றிலும் எடுபடவில்லை. கடைசி கட்டத்தில் டேனியல் கிறிஸ்டியன் ஓரளவு சிறப்பாக வீசி அசத்துகிறார். ‘சுழலில்’ அமித் மிஸ்ரா, நதீம் இருவரும் சொதப்புகின்றனர். பீல்டிங்கிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பவுலிங், பீல்டிங் இரண்டிலும் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே கோல்கட்டாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இரண்டாவது வெற்றிக்கு இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேருக்கு நேர்: இவ்விரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், கோல்கட்டா அதிகபட்சமாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 8 ஆட்டத்தில் மட்டும் தனது வெற்றியை டில்லி அணி பதிவு செயதுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு போட்டி ரத்தாகி உள்ளது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …