Breaking News
Home / latest-update / எலிகளுக்காகவே ஒரு கோயில்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

எலிகளுக்காகவே ஒரு கோயில்

எலிகளை வீட்டில் பார்த்தாலே நமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். அதே நாம் கோவிலுக்கு செல்கையில் அந்த கோவில் முழுக்க எலியாக இருந்தால் எப்படியிருக்கும். அப்படி எங்கு பார்த்தாலும் எலியாக வாழும் கோவில் ஒன்றும் உள்ளது.

அது ராஜஸ்தானின் பீகானேர் மாவட்டத்தில் உள்ள தேஷ்நோக் கிராமத்தில் அமைந்துள்ளது துர்க்கையின் அவதாரமான கர்ணி மாதாவின் திருக்கோயில் அது. எலிகளுக்கான ஒரு ஆலயமாகவே அது கருதப்படுகின்றது.



அரண்போல் இருக்கும் மதில் சுவர்களால் சூழப்பட்டு இருக்கிறது கர்ணி மாதாவின் திருக்கோயில்.

இக்கோவிலின் முன்புற நுழைவு வாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன, இக்கோயிலின் வாயிற் கதவுகள் முழுக்க முழுக்க வெள்ளியால் ஆனவை.

அதில் கர்ணி மாதாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள்அனைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் தேவி கையில் சூலத்துடன் சுற்றியும் எலிகளுடன் காட்சி தருகின்றாள்.



இங்கு அதிகமாக கருப்பு எலிகள் மட்டுமே காணப்படுவதால், வெள்ளை எலிகள் தப்பித்தவறி மக்கள் கண்களில் பட்டால் மிகவும் நல்லது என மக்கள் நம்புகிறார்கள்.

அதனால் தான் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகளுக்கு இந்த ஆலயத்தில் ராஜமரியாதை அளிக்கப்படுகிறது.

இவ்வாலயத்தில் விக்ரகம் முழுவதும் குங்குமத்தால் மூடப்பட்டிருக்கிறது, பெரிய தட்டுக்களில் லட்டுகள், பால் பிரசாதங்கள் போன்ற தின்பண்டங்கள் எலிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இங்கு செல்லும் மக்கள் எண்ணிக்கையை விட அங்கு வாழும் எலிகளின் எண்ணிக்கையே அதிகம்.

Check Also

கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் விண்டோஸ் இயங்கக்கூடிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #GooglePlayStore #Apps கூகுள் பிளே ஸ்டோர் …