Breaking News
Home / latest-update / எரிபொருள் விலை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

எரிபொருள் விலை, வாழ்க்கை செலவு அதிகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று (18) மதியம் 3 மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும், தேவை அற்ற வரிகள் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதன் போது முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் எரிபொருள் சூத்திரம் எனும் அடிப்படையில், எந்தவொரு காரணமும் இன்றி திடீரென எரிபொருளின் விலையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், இதனால் சாதாரண மக்களது வாழ்க்கைச் செலவீனம் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஆர்பாட்டத்தின் போது ´பொருட்களின் விலையை குறை´, ´பஸ் கட்டணத்தை குறை´, ´வரி அறவீடு எமக்கா அல்லது உமது சுகத்துக்கா´ எனும் வாசகங்களுடன் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு கோசங்கள் எழுப்பிய வண்ணம் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(மலையக நிருபர்கள் – இராமச்சந்திரன் மற்றும் கிரிஷாந்தன்)

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …