Breaking News
Home / latest-update / என்னை பலவீனப்படுத்தினால் பேய்களுக்குத்தான் மீண்டும் பலம் கூடும்: மைத்திரிபால சிறிசேன
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

என்னை பலவீனப்படுத்தினால் பேய்களுக்குத்தான் மீண்டும் பலம் கூடும்: மைத்திரிபால சிறிசேன

‘என்னை பலவீனப்படுத்தினால் பேய்களுக்குத்தான் மீண்டும் பலம் கூடும்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய தமிழ்த் தின விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “நான் யாழ். வரும் போது சில சம்பவம், சில போராட்டம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நான் பல வருடம் அரசியல் செய்து வருகிறேன். எனக்கு நன்றாக தெரியும். என்னை ஜனாதிபதியாக எல்லோரும் தெரிவு செய்தீர்கள்.

பிரச்சினை தீர்க்க தான் ஜனாதிபதி ஆக்கினார்கள். தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏழ்மை இல்லாமல் செய்ய வேண்டும். அத்தனை பேரும் என்னுடன் வந்து கலந்துரையாடி பிரச்சனைகளை தீர்க்க வாருங்கள். நான் உங்களுக்கு அழைப்புவிடுகிறேன்.

கறுப்பு கொடி காட்டினார்கள். உரத்து சத்தம் இட்டார்கள். அது எனக்கு எதிர்ப்பாக இருக்கலாம். நான் அவர்களை பார்க்கப் போனேன். ஏன் என்று கேட்டேன். விடயத்தை சொன்னார்கள். பிரச்சனைகள் இருந்தால் பேச்சு வார்த்தைக்கு வர சொல்லிக்கேட்டேன். அது முடியாது, இப்போதே கோரிக்கைக்கு முடிவு தாருங்கள் என கோருகிறார்கள்.

எந்த பிரச்சனை என்றாலும் அனைத்து தரப்புடன் பேசித்தான் ஆக வேண்டும். என்னுடன் பேசலாம். முரண்பாடு ஏற்படுத்த கூடாது, வன்முறை வேண்டாம்.

இந்த நாட்டில் இனி யுத்தம் ஏற்படுத்த முடியாது யுத்தத்தால் அனுபவப்பட்டுள்ளோம். செல்வந்தர்கள் வெளிநாடு போய்விடுவார்கள், ஆனால் ஏழைகள்தான் கஷ்ரப்படுகிறார்கள். அவர்களின் தலைவர் இறந்து விட்டார். அதனால் ஏற்பட்ட பாதிப்பு அனைவருக்கும் தெரியும். எனவே இங்கு கறுப்பு கொடி உயர்த்த தேவை இல்லை. சமாதானத்துக்கு வெள்ளை கொடி உயா்த்த வேண்டும்.

விரோதம் வன்முறை ஏற்படுத்தினால் சக்தி பெறுவது வேறு ஆட்கள் தான். எல்லா இனம் மத்தியில் சகோதரம் ஏற்படுத்த தான் நான் செயற்பட்டு வருகிறேன். அனைவருக்கும் ஒரு நியாயம் ஏற்படுத்த தான் செயற்படுகிறேன். என்னை பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்களுக்கதான் பலம் கூடும்.” என்றுள்ளார்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …