Breaking News
Home / latest-update / எச்சரிக்கை – மணிக்கு 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

எச்சரிக்கை – மணிக்கு 70 – 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்

ஹம்பாந்தோட்டை முதல் மன்னார் வரையிலான காலி, கொழும்பு பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்து வரும் மணித்தியாலங்களில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதி கடற்பரப்பு கொந்தளிப்பானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்துவரும் இரண்டு நாட்களில் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கடற்றொழில் நீரியல்வள அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.



கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை – 3 மீனவர்களை காணவில்லை

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …