Sunday , February 18 2018
Breaking News
Home / latest-update / ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கர்ப்பிணி கொலை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
https://www.facebook.com/esoftjaffna/

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கர்ப்பிணி கொலை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்­பா­ணம் ஊர்­கா­வற்­துறை பிர­தே­சத்­தில் கர்ப்­பிணி பெண் ஒரு­வரை படு­கொலை செய்த குற்றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­டுள்ள சகோ­த­ரர்­கள் இரு­வ­ரின் விளக்­க­ம­றி­யல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

ஊர்­கா­வற்­துறை நீதி­வான் மன்­றில் நீதி­வான் ஏ.எம்.எம்.றியாழ் முன்­னி­லை­யில் குறித்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. விளக்­க­ம­றி­ய­லில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­கள் இரு­வ­ரும் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.




குறித்த வழக்­கின் விசா­ர­ணையை குற்ற புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு மாற்றுமாறு நீதி­மன்று கடந்த தவ­ணை­யின்­போது (கடந்த மாதம் 24ஆம் திகதி) உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில் இது­வ­ரை­யில் குற்­ற­ பு­ல­னாய்­வுப் பிரி­வி­னர் விசா­ர­ணை­களை பொறுப்­பெ­டுக்­க­வில்லை என மன்­றில் தெரி­விக்­கப்­பட்­டது. அத­னைத்­தொ­டர்ந்து சந்­தேக நபர்­களை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

About admin

Check Also

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவில் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *