Home / latest-update / உலகம் முழுவதும் 81.5 கோடி பேர் பசியால் தவிப்பு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உலகம் முழுவதும் 81.5 கோடி பேர் பசியால் தவிப்பு

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதமாகும். ஆசியாவில் மட்டும் 52 கோடி பேரும் ஆப்பிரிக்காவில் 24 கோடி பேரும் பசியால் வாடுகின்றனர்.

உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் பசியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இதுவே பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Check Also

20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்

சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி …