Breaking News
Home / latest-update / உங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா? இதப்படிங்க!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா? இதப்படிங்க!

நகங்களில் உண்டாகும் மாற்றங்கள், தோற்றம், நிறம் மாறுதல், நகம் வலுவிழந்து போவது போன்றவற்றை வைத்து உங்கள் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அல்லது உடலில் எந்த எதிர்மறை தாக்கம் அதிகரித்து வருகிறது போன்றவற்றை கண்டறியலாம்.
நமது உடலில் ஏதேனும் நல்ல அல்ல தீய மாற்றங்கள் உண்டானால் அதை நமது உடல் ஏதாவது ஒரு அறிகுறியாக வெளிப்படுத்தும். அந்த வகையில் நகத்தில் பிறை நிலா போன்ற தோற்றத்தில் வெளிப்படும் அறிகுறி எதை குறிக்கிறது என இங்கு காணலாம்…

பெரிய பிறை நிலா குறி!

பாதி நக அளவில் பெரிய பிறை நிலா குறி தோன்றுவது அந்த நபருக்கு ஏதோ கெட்ட செய்தி நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது

இந்த குறியே இல்லை என்றால்?

இந்த குறியே இல்லை என்றால் உங்கள் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறதாம். இதனால், நீங்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

சிறிய பிறை நிலா குறி!

உங்கள் விரலில் பிறை நிலா அறிகுறி மிக சிறியதாக இருந்தால் உங்கள் ஆரோக்கியம் குறைவாக இருப்பதையும், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மந்தமாக இருப்பதையும் அறிய முடியும்.

சீன மருத்துவம்!

சீன முறையில் இந்த பிறை நிலா அறிகுறியை வைத்து ஒருவரது நடப்பு ஆரோக்கிய நிலையை அறிய முடியும் என கூறுகின்றனர்.

பிறை நிலா வடிவம்!

உங்கள் விரல் நகத்தின் அடி பாகத்தில் இந்த பிறை நிலா தோற்றம் ஏற்படுவது ஒருவரது உடலில் ஏற்படும் குறைபாடுகளை குறிக்கிறதாக சீனர்கள் கூறுகின்றனர்.

இரத்த ஓட்டம்!

இந்த பிறை நிலா அறிகுறி இரத்த ஓட்டம் குறைவாக அல்லது மந்தமாக இருந்தால் தென்படுமாம்.

இதய கோளாறுகள்!

ஒருவருக்கு இதய கோளாறுகள் இருந்தாலும் கூட அதை நகத்தில் தோன்றும் இந்த பிறை நிலா அறிகுறி வெளிக்காட்டுகிறது என சீன மருத்துவ முறை கூறுகிறது.

நகம் குவித்து காணப்படுவது! தொடர்ந்து வருடக்கணக்கில் நகம் சற்று மேடு போல குவிந்து காணப்படுவது, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதையும், நுரையீரல் நோய் உண்டாவதையும் வெளிபடுத்தும் அறிகுறிகள் ஆகும். மேலும், இது குடல், இதயம், கல்லீரல் போன்ற நோய்களுக்கான அறிகுறியாகவும் வெளிப்படுகிறது.

நகம் குழி போன்று காணப்படுவது! ஸ்பூன் குழி போல நகம் உள்வாங்கி காணப்படுவது, இரும்புச்சத்து குறைபாடு, இரத்தசோகை போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகின்றன. மேலும், இது இதய நோய்கள் மற்றும் தைராய்டு சுரப்பிக் குறைபாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

நிறம் வேறுபடுதல்! உங்கள் நகத்தில் பெரும்பாலும் வெள்ளையாகவும், நக நுனியில் மட்டும் பின்க் நிறத்தில் நேரோ (Narrow) போன்று வளைந்து காணப்படுவது, கல்லீரல் நோய், இதய செயற்திறன் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு போன்றவற்றின் அறிகுறியாகும்.

நகத்தில் பியூ வரிகள்! நகத்தின் குறுக்கே வரிகள் போன்று தோன்றுவது, நீரிழிவு, வாஸ்குலர் நோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, நிமோனியா மற்றும் ஜின்க் குறைபாடு போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது.

விரல் நகங்கள் வலுவிழந்து போவது, லூசாக இருப்பது, மங்கிய வெள்ளை / மஞ்சள் நிறத்தில் காணப்படுவது, தைராய்டு நோய் மற்றும் சொரியாசிஸ் போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகிறது. இது நகத்தை இறுக்கமின்றி, தசையில் இருந்து சற்று விலகி இருக்க செய்யும்.

மஞ்சள் நகங்கள்! சுவாச பிரச்சனைகள் அல்லது நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்தால் இந்த மஞ்சள் நக நோய் தென்படலாம்.

நகத்தில் சின்ன சின்ன குழிகள் / புள்ளிக்கள் போன்று காணப்படுவது, சொரியாசிஸ், சருமத்தில் செதில் போன்ற திட்டுகள், திசு சீர்குலைவுகள், முடி கொட்டுதல் போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …