Breaking News
Home / latest-update / இலங்கை – நோர்வே நாடுகளுக்கிடையில் வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகள் நடத்தப்பட்டன
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கை – நோர்வே நாடுகளுக்கிடையில் வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகள் நடத்தப்பட்டன

இலங்கையும் மற்றும் நோர்வே நாடுகளுக்கிடையிலான வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகள் ஒஸ்லோ நகரில் கடந்த 11ம் திகதி நடத்தப்பட்டுள்ளன.

இதன் போது இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.பிரசாத் காரியவசம், நோர்வே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நாயகம் திரு.வேகர் ஸ்ட்ரோமனை சந்தித்துள்ளார்.

நோர்வேயின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தல் தொடர்பான வழிமுறைகள் குறித்தும் இரு செயலாளர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …