Breaking News
Home / latest-update / இலங்கை தமிழரசுக் கட்சிக்கு முழுக்குப் போட்ட முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு முழுக்குப் போட்ட முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்…!!

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளார்.நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், குறித்த கடிதத்தை தனக்கு வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கடிதத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் முதலமைச்சருக்கு இடையில் சுமார் ஒரு மணிநேரம் நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் உருவாக்கிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Check Also

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை …